மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு

திருச்செங்கோடு, ஜன.4: நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திருச்செங்கோடு சர்வேயர் செல்வகுமார், கட்சி நிர்வாகிகளுடன் திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம் அருகே காமராஜர், டாக்டர்  சுப்பராயன், பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், குமாரபாளையம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜானகிராமன், மாவட்ட முன்னாள் துணை தலைவர் நெல்லை தங்கராசு, முன்னாள் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், குறிஞ்சி கோவிந்தசாமி, மாநில சேவாதள கூடுதல் செயலாளர் செல்வகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், எலச்சிபாளையம் தங்கராஜ், மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், நகர துணை தலைவர்கள்  காசிவிஸ்வநாதம், கோபாலகிருஷ்ணன், நெசவாளர் அணி இளங்கோவன், கதிரேசன், அர்த்தநாரீஸ்வரர் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் நாகராஜன், வட்டார துணை தலைவர் திருமலை, நகர பொதுச்செயலாளர் சந்திரசேகரன், பாலகிருஷ்ணன், சிவாஜி ஆறுமுகம்,  சண்முகம், முருகேசன், சண்முகம்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>