மத்திய, மாநில அரசுகளை கண்டித்து துண்டுபிரசுரம்

சேந்தமங்கலம், ஜன.4: புதுச்சத்திரம் ஒன்றியம் திருமலைப்பட்டியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஜோதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மத்திய அரசின்  வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெறவேண்டும், வலியுறுத்தியும் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளை கண்டித்தும், துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் செல்வம், ராஜூ, மாவட்ட துணை செயலாளர் ரவிநாத்மல்லிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>