×

மாவட்டம் முழுவதும் குரூப்-1 தேர்வை 2408 பேர் எழுதினர்

கிருஷ்ணகிரி, ஜன.4: கிருஷ்ணகிரியில் நடந்த குரூப் 1 போட்டித் தேர்வை 2408 பேர் எழுதினர். தேர்வெழுத விண்ணப்பித்தவர்களில் 53 சதவீதம் பேர் ஆப்சென்ட் ஆகினர். கிருஷ்ணகிரியில் டிஎன்பிஎஸ்சி மூலம் துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான குரூப்-1 தேர்வுகள் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது:

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 431 பேர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 288 பேர், நாளந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 155 பேர், வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 139 பேர், ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 284 பேர், டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 145 பேர், கேம்பிரிஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 142 பேர், பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 136 பேர், டான்பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 141 பேர், அரசு ஆடவர் கலைக்கல்லூயில் 281 பேர், அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 132 பேர், புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 134 பேர் என மொத்தம் 17 மையங்களில் 2408 பேர் தேர்வு எழுதினர். மாவட்டத்தில் இந்த தேர்வினை எழுத 5,090 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், 2408 பேர் மட்டுமே எழுதினர். 2,682 பேர் இந்த தேர்வினை எழுதவில்லை. இதன் மூலம் 47 சதவீதம் பேர் மட்டுமே இத்தேர்வினை எழுதியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : district ,Group-1 ,
× RELATED 11 மாவட்ட கல்வி அதிகாரி காலி...