சாலைகளை சீரமைக்க கோரி இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஜன.4: சாலைகளை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீர் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குமரி மாவட்ட குழு சார்பில் நாகர்கோவில், ஒழுகினசேரியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமை வகித்தார்.

நிர்வாகிகள் நாகராஜன், அனில் குமார், சொக்கலிங்கம், கங்கா, கல்யாணசுந்தரம், அசோகன், சுப்பையா, சூரியகுமார், அண்ணாதுரை, அருள்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் சுபாஷ் சந்திரபோஸ் தொடங்கி வைத்தார். மாவட்ட துணை செயலாளர் துரைராஜ், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் ராஜூ, பேராசிரியர் சுந்தரம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் இசக்கிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

Related Stories:

>