வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை நெரித்து செயின் பறிப்பு

நாகர்கோவில், ஜன.4:  பளுகல் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை நெரித்து செயின் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பளுகல் அருகே மாங்காலை பகுதியை சேர்ந்தவர் ராகவன்(65). இவரது தாயார் பகவதி அம்மாள்(80). இவர் நேற்று முன்தினம் காலையில் தோலடி, சுடலைகால புத்தன் வீடு பகுதியில் உள்ள வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது இரண்டு நபர்கள் வீட்டினுள் நுழைந்து பகவதி அம்மாளை கட்டையால் தாக்கி கழுத்தை நெரித்து கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் செயினை பறித்துவிட்டு ஆட்டோவில் தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

திருட்டு போன செயினின் மதிப்பு ரூ.35 ஆயிரம் ஆகும். இது தொடர்பாக ராகவன் பளுகல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பகவதி அம்மாள் இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு  முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

Related Stories:

>