×

அவிநாசி போலீஸ் உட்கோட்டத்தில் 30 கிராமங்களை கண்காணிக்க சிறப்பு காவலர்கள் நியமனம்

அவிநாசி,ஜன.4:  அவிநாசி போலீஸ் உட்கோட்டத்துக்கு உட்பட்ட 30 கிராமங்களை கண்காணிக்க, சிறப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று பொதுமக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் சிறப்பு காவலர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
அவிநாசி காவல் உள்கோட்டத்தில், சட்ட விரோத செயல்கள், குற்றச்சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும், சந்தேகப்படும் படியான நபர்களை உடனடியாக தெரியப்படுத்துவதற்காக, கிராமப் பகுதிகளுக்கு சிறப்பு காவலர்கள் நேற்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அவிநாசி போலீஸ் டி.எஸ்.பி. பாஸ்கரன் மற்றும் இன்ஸ்பெக்டர் அருள் ஆகியோர் கூறுகையில், அவிநாசி வட்டாரத்தில் அவிநாசி நகரபேருராட்சி, நடுவச்சேரி,  பழங்கரை, குப்பாண்டாம்பாளையம், அய்யம்பாளையம், துலுக்கமுத்தூர், நம்பியாம்பாளையம், கருவலூர், இராமநாதபுரம், செம்பியநல்லூர், வேலாயுதம்பாளையம், தெக்கலூர், உப்பிலிபாளையம் உள்ளிட்ட மொத்தம் 30 கிராமங்களை கண்காணிக்கும் வகையில்,  காவல் பணிகளை மேற்கொள்ளவும் 12  சிறப்பு போலீசார் நேற்று பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளனர்.

மேலும், அந்தந்த கிராமப்பகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ள போலீசாரின் புகைப்படம், அவர்களது செல்போன் எண்ணுடன் கூடிய தகவல் பெயர் பலகையும் திறக்கப்பட்டது. கிராம மக்களுக்கு தேவையான குடிநீர்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும், குறைகளையும் கேட்டறிந்து, உடனடியாக தீர்வு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்  உடனடியாக அந்தந்த காவலர்களுக்கு குற்றச்சம்பங்களைத் தெரியப்படுத்தி, உடனடியாக பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவிநாசி போலீஸ் டிஎஸ்.பி. பாஸ்கரன் தெரிவித்தார்.

Tags : villages ,police subdivision ,Avinashi ,
× RELATED திருப்பத்தூரில் 14 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு