அனுப்பர்பாளையத்தில் சிக்னல் அமைக்க வலியுறுத்தல்

பொள்ளாச்சி, ஜன. 4: பொள்ளாச்சி அருகே அனுப்பர்பாளையம் நான்கு சாலை சந்திப்பில், விபத்தை தவிர்க்க தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சி அருகே ஊஞ்சவேலாம்பட்டியிலிருந்து பிரிந்து செல்லும் தாராபுரம் நெடுஞ்சாலையில், பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து வாகன போக்குவரத்து உள்ளது. இதில் தாராபுரம் ரோடு அனுப்பர்பாளையம் வழியாக, திப்பம்பட்டியிலிருந்து ஆச்சிப்பட்டி வரையிலும் உள்ள சாலையை இணைக்கும் புறவழிச்சாலை உள்ளது.

இதனால் அனுப்பர்பாளையம் நான்கு சாலை சந்திக்கும் இடமாக உள்ளது. வாகனப்போக்குவரத்து மிகுந்த இந்த இடத்தில் சிக்னல் மற்றும் போக்குவரத்து போலீசார் இல்லாததால், சிலநேரங்களில் வாகனங்கள் தாறுமாறாக செல்கிறது. இவ்வாறு அந்தவழியாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து நேரிடுவதா ககூறப்படுகிறது. எனவே, தாராபுரம் ரோடு அனுப்பர்பாளையத்தில் நான்கு சாலை சந்திக்கும் இடத்தில் விபத்தை தவிர்க்க போக்குவரத்து போலீசாரை நிறுத்த வேண்டும். அல்லது, தானியங்கிசிக்னல் அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தவும், விதிமுறைகளை மீறுவதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>