×

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய நிர்வாகிகள் நியமனம்

கோவை, ஜன. 4: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மாநில பொதுச்செயலாளராக பி.எஸ்.சரவணக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர், மாவட்ட பொதுச்செயலாளர், மாநில செயலாளர், புதுச்சேரி மாநில பொறுப்பாளர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கவுன்சில் உறுப்பினராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவராக டாக்டர் அழகு ஜெயபாலன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ் அழகிரி பரிந்துரையின் பேரில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர்  சோனியா காந்தி,  தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஒப்புதலுடன், இந்த நியமன அறிவிப்பினை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார். இப்பொறுப்பேற்றுள்ள டாக்டர் அழகு ஜெயபாலன் தமிழக காங்கிரஸ் கட்சியில் ஏற்கனவே மாநில செயலாளராகவும், சமுதாயம் சார்ந்த பொறுப்புக்களில் தமிழ்நாடு மருந்து வணிகர்களின் சங்கத்தின் தலைவராகவும், கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்ட மருந்து வணிகர்களின் சங்கத் தலைவராகவும், கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட ஒருங்கிணைந்த மாவட்ட அரிமா ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் கோவை பேரூர் கோவிலின் அறங்காவலர் குழுத் தலைவராக இருந்து சிறப்பாக ஆன்மீக பணியாற்றியுள்ளார். புதியதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கு கட்சி நிர்வாகிகள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Tags : Tamil Nadu Congress Committee ,executives ,
× RELATED ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடும்...