×

24 மையத்தில் 5 ஆயிரம் பேர் குரூப்-1 தேர்வு எழுதினர்

கோவை, ஜன. 4: கோவை மாவட்டத்தில் குரூப்-1 தேர்வு  24 மையங்களில் நேற்று நடந்தது. தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வுகள் கோவை மாவட்டத்தில் 24 தேர்வு மையங்களில் நடந்தது. இதில், 11 ஆயிரத்து 888 பேர் தேர்வெழுத விண்ணப்பித்து இருந்தனர்.  இதில், 5 ஆயிரத்து 109 பேர் தேர்வு எழுதினர். 6,779 பேர் தேர்வு எழுதவில்லை. மேலும், தேர்வு மையங்களுக்கு செல்ல தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.
தேர்வை கண்காணிக்க 9 நடமாடும் அலுவலர்கள், 40 தேர்வு கூட கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் துணை ஆட்சியர் நிலையில் 5 பறக்கும் படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.

முறைகேடுகள் நடக்காமல் இருக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி நிலையில் மாவட்ட அளவிலான ஆய்வுக்குழு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அனைத்து தேர்வு மையங்களிலும் வீடியோ பதிவு வசதி செய்யப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக தேர்வுக்கூடங்களில் போதுமான பாதுகாப்பு மற்றும் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. முகக்கவசம் அணிந்து இருப்பதை உறுதி செய்த பிறகே தேர்வு மையங்களுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளியில் உள்ள குரூப்-1 தேர்வு மையத்தில் தமிழ்நாடு தேர்வாளர் பணி ஆணையத்தின் தலைவர் பாலச்சந்திரன், மாவட்ட கலெக்டர் ராஜாமணி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பீளமேடு பகுதியில் உள்ள தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்ததாக கூறி தேர்வர்கள் பலர் தேர்வு எழுத அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில், தேர்வர்கள் தாங்கள் குறித்த நேரத்தில் வந்ததாகவும், ஆனால் தேர்வு எழுத அனுமதிக்க மறுத்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : centers ,Group-1 ,
× RELATED கடலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி..!!