வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா

ஈரோடு, ஜன. 4:  ஈரோடு மாவட்டத்தில் மக்கள் கிராம சபை கூட்டத்தில்  கலந்து கொள்வதற்காக ஈரோடு வந்திருந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று  காலை ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில்,  சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262வது பிறந்த நாளையொட்டி  அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு தி.மு.க. தலைவர்  மு.க.ஸ்டாலின் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாநில  நிர்வாகிகள் சுப்புலட்சுமிஜெகதீன், அந்தியூர் செல்வராஜ், கந்தசாமி,  சந்திரகுமார், மாவட்ட செயலாளர் முத்துசாமி மற்றும் மாவட்ட, மாநகர  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>