×

மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வில் 3,689 பேர் ஆப்சென்ட்

ஈரோடு, ஜன. 4:  ஈரோட்டில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல் நிலை தேர்வில் 3,689 பேர் ஆப்சென்ட் ஆகினர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி)  சப்-கலெக்டர், டி.எஸ்.பி., வணிகவரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு துறை துணை  பதிவாளர், மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி உள்ளிட்ட பல்வேறு  குடிமைப்பணிக்கான குரூப் 1 முதல் நிலை தேர்வு அனைத்து மாவட்டங்களிலும்  நேற்று நடந்தது. இதில், ஈரோடு தாலுகாவில் 28 தேர்வு மையங்களில் தேர்வு  நடந்தது. தேர்வினை 19 மாற்றுத்திறனாளிகள் உட்பட 7,993 பேருக்கு தேர்வு எழுத  நுழைவு சிட்டு வழங்கப்பட்டிருந்தது.

தேர்வானது நேற்று காலை 10 மணிக்கு  துவங்கி மதியம் 1.15 மணி வரை நடந்தது. ஸ்க்ரைப் (உதவியாளர்) மூலம் தேர்வு  எழுதிய மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்பட்டு  மதியம் 2.15 மணிக்கு தேர்வு முடிந்தது. இத்தேர்வில் 6 மாற்றுத்திறனாளிகள்  உட்பட 3,689 பேர் ஆப்சென்ட் ஆகினர். இத்தேர்வு கொரோனா பாதுகாப்பு  வழிமுறைகளை கடைபிடிக்கும் வகையில் ஒரு தேர்வு மையத்திற்கு 300 தேர்வர்கள்  மட்டுமே தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

தேர்வில் முறைகேடுகளை  தடுக்க 3 பறக்கும்படை அலுவலர்களும், 5 நடமாடும் குழுவும், 29  ஒளிப்பதிவாளர்களும், 28 கண்காணிப்பு அலுவலர்களும் ஈடுபட்டனர். முன்னதாக  தேர்வர்கள் காலை 9 மணிக்கு முன்பே தேர்வு மையத்திற்கு முகக்கவசம் அணிந்தபடி  வந்து காத்திருந்தனர். அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலையை  ஆய்வு செய்து, அவர்களை பரிசோதனை செய்த பின்னரே தேர்வறைக்குள்  அனுமதித்தனர். தேர்வு நடக்கும் அனைத்து மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : district ,examination ,Group 1 ,
× RELATED 11 மாவட்ட கல்வி அதிகாரி காலி...