×

ஆன்லைன் மற்றும் சந்தைகளில் மலைக்கிளி விற்ற டாக்டர் கைது: மேலும் 4 பேர் சிக்கினர்

ஆலந்தூர்: மலை பிரதேசங்களில் வசிக்கும் பாதுகாக்கப்பட்ட கிளிகளை சிலர் சந்தைகள் மற்றும் ஆன்லைனில் விற்பதாக கிண்டி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கிண்டி வனச்சரகர் கிளமென்ட் எடிசன் தலைமையிலான வனத்துறையினர் நேற்று சந்தைகளில் ஆய்வு செய்தனர். அப்போது, சாந்தோம் பகுதியில் பிறந்து சில நாட்களான மலை கிளிகளின் குஞ்சுகள் விற்பது தெரிந்தது. விசாரணையில், ராயபுரத்தை சேர்ந்த அக்குபஞ்சர் டாக்டர் முகமது ரமலி (56) அவற்றை விற்றது தெரிந்தது. அவரது வீட்டில் சேதனை நடத்தியதில் 53 மலைக்கிளி குஞ்சுகள் இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்திய வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ம் ஆண்டு 4ல் மலைக்கிளிகள் பாதுகாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதை விற்பது சட்டப்படி குற்றம். இந்த கிளிகள் டிசம்பர் மாத இறுதியில் தொடங்கி ஜனவரி வரை குஞ்சு பொறிக்கும். இதை சிலர் எடுத்து வந்து ஒரு ஜோடி ரூ.2 ஆயிரம் வரை டாக்டரிடம் விற்றுள்ளனர். இதை, அவர் ஆன்லைன் மற்றும் சந்தைகளில் ஒரு ஜோடி ரூ.4 ஆயிரம் வரை விற்றது தெரிந்தது. இதுதொடர்பாக, டாக்டர் முகமது ரமலி (56), முத்துசெல்வம் (20), பழைய வண்ணாரபேட்டையை சேர்ந்த ஜெகன் (31), தண்டையார்பேட்டையை சேர்ந்த சதீஷ்குமார் (27), பாரிமுனையை சேர்ந்த கார்த்திக் (35) ஆகிய 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

Tags : Doctor ,
× RELATED பூசணி விதையின் பயன்கள்!