திருப்போரூரில் பொங்கல் விளையாட்டுப் போட்டி

திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சி, படவேட்டம்மன் கோயில் தெரு இளைஞர்கள் சார்பில் நடத்தப்படும் ஸ்மார்ட் கைஸ் விளையாட்டுக்குழுவின் சார்பில் பொங்கல் விளையாட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்த பொங்கல் விளையாட்டு நிகழ்ச்சியின்போது பொதுமக்கள், சிறுவர்கள், பெண்கள் கலந்துக் கொள்ளும் வகையில் வாலிபால், கபடி, கிரிக்கெட், உறியடித்தல், சறுக்கு மரம் ஏறுதல், கயிறு இழுத்தல், கோலப்போட்டி, பளு தூக்குதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்ற கோஷத்தை மையமாக வைத்து நேற்று மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

Related Stories:

>