×

காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களை பூகோள ரீதியாக முறையாக பிரிக்க வலியுறுத்தல்


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களை நடைமுறை சிக்கல்களை தவிர்க்க பூகோள ரீதியாக முறையாகப் பிரிக்க வேண்டும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட பேரவைக் கூட்டம் நேற்று காஞ்சிபுரம் சேக்குப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஜெகஜீவன்ராம் தலைமை தாங்கினார்.

மாவட்ட துணைத்தலைவர் முத்துசுந்தரம் வரவேற்றார். மாவட்ட இணைசெயலாளர் நிர்மல்குமார், மாவட்ட பொருளாளர் திருமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர்கள் சதீஷ்குமார், ரமேஷ், இணைசெயலாளர் டில்லிபாபு, மாநில செயற்குழு உறுப்பினர் மருதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணனைத்தலைவர் காந்திமதிநாதன் பேரவையினை தொடங்கிவைத்து உரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் குமார், தோழமை சங்க நிர்வாகிகள் நவீன்குமார், ரவிச்சந்திரன், சாரங்கபாணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில செயலாளர் சார்லஸ் சசிக்குமார் நிறைவுறை ஆற்றினார். மாவட்ட துணைத்தலைவர் கண்ணன் நன்றி கூறினார்.

இந்த பேரவைக் கூட்டத்தில், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 40 கிராம ஊராட்சிகளில் 12 கிராம ஊராட்சிகள் வாலாஜாபாத் வட்டத்தில் அடங்குகிறது. அதேபோல, வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 61 கிராம ஊராட்சிகளில் 31 கிராம ஊராட்சிகள் காஞ்சிபுரம் வட்டத்தில் அடங்குகிறது. எனவே, நடைமுறை சிக்கல்களை தவிர்க்கவும், நிர்வாக வசதிக்காகவும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களை பூகோள ரீதியாக மாவட்ட நிர்வாகம் பிரிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : Panchayat Unions ,Kanchipuram District ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்...