×

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு மாவட்டத்தில் 44 % பேர் தேர்வு எழுதவில்லை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 21 தேர்வு மையங்களில் 29 தேர்வுக் கூடங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்றது. இதில் 9536 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் 5384 தேர்வர்கள் மட்டுமே தேர்வு எழுத  மையத்திற்கு வந்து தேர்வு எழுதினர். மீதமுள்ள 4152 தேர்வர்கள் தேர்வு எழுத வரவில்லை. காஞ்சிபுரம் பக்தவத்சலம் தொழிற்நுட்பக் கல்லூரி தேர்வு மையத்தில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்தத் தேர்வு நடைபெறுவதை கண்காணிக்க 29 தேர்வு கூடங்களுக்கு 29 ஆய்வு அலுவலர்களும் 3 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டிருந்தது. தேர்வு எழுதுபவர்களுக்கு ஏதுவாக அனைத்து தேர்வு மையங்களுக்கு சென்று வர தேவையான பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தது. தேர்வர்கள் முககவசம் அணிந்து வருவது கண்காணிக்கப்பட்டது. தேர்வர்கள் அனைவரும் சுகாதாரத்துறையின் மூலம் உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே தேர்வு கூடத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

* தாமதமாக வந்த தேர்வர்கள்
காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழக தேர்வு மையத்தில் காலை 9.15மணிக்கு வந்த தேர்வர்கள் தேர்வுக் கூடத்துக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் தேர்வு எழுத வந்த தேர்வர்கள் சுமார் 50 பேர் பணியில் இருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டி இருந்ததால் நேரம் தவறி வந்த தேர்வர்களை அனுமதிக்க முடியவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags : DNPSC Group 1 ,
× RELATED டி.என்.பி.எஸ்.சி குரூப் 1,2 தேர்விலும்...