×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிதமான மழை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கடந்த சில தினங்களாக வெயில், மேகமூட்டம் என மாறிமாறி இருந்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், வடமாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை மையம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நேற்றும் மேகமூட்டம், சாரல் மழை என மாறி மாறி நிலவி வருவதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Kanchipuram district ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை...