×

2 நாள் பயணமாக டெல்லி சென்றார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், 2 நாள் பயணமாக நேற்று சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். மாலை டெல்லி போய் சேர்ந்த துணை முதல்வருக்கு, டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்பு, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் இரவு தங்கினார்.

இதையடுத்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், டெல்லியில் இன்று காலை ஒன்றிய விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடக்கும் ஹாக்கி விளையாட்டு போட்டியின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்கிறார். பின்பு, பிற்பகல் டெல்லியில் இருந்து பயணிகள் விமானம் மூலம் புறப்பட்டு சென்னைக்கு திரும்பி வருகிறார்.

தற்போது, தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணிகள் குறித்து, பரபரப்பான ஒரு சூழ்நிலை நிலவிக்கொண்டு இருப்பதால் டெல்லி செல்லும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்திப்பாரா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதைபோல், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரையும் சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags : Udhayanidhi Stalin ,Delhi ,Chennai ,Tamil Nadu ,Deputy ,Chief Minister ,Deputy Chief Minister ,Indigo Airlines ,
× RELATED 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து