ஆட்டோ டிரைவர் தற்கொலை

ஆவடி: அய்யப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் குணசேகரன்(33). ஆட்டோ டிரைவர். குடிப்பழக்கம் உடையவர். இவரது மனைவி பிரியா(28). தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். குணசேகரன், வேலை முடிந்ததும் குடித்துவிட்டு வருவது வழக்கம். இதனால் கணவன் மனைவிக்கு இடையில் குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பிரியா, கணவனுடன் கோபித்து கொண்டு 2 மகன்களுடன் திண்டுக்கல்லில் உள்ள பெற்றோர் வீட்டில் தஞ்சமடைந்தார். இதனால் குணசேகரன், விரக்தியில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் குணசேகரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த திருமுல்லைவாயில் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

Related Stories:

>