×

திருவள்ளூர் மாவட்டத்தில் 2457 விண்ணப்பதாரர்கள் குரூப் 1 தேர்வு எழுதினர்

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 முதன்மை தேர்வு 13 மையங்களில் நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்து 132 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். ஆனால் தேர்வு மையங்களில் 2 ஆயிரத்து 457 நபர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். மீதி 2 ஆயிரத்து 675 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத வரவில்லை. திருவள்ளூர் தாலுகா, அரண்வாயலில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானையத்தால் நடத்தப்படும் குரூப்-1 தேர்வினை கலெக்டர் பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது, “இத்தேர்வுக்காக 4 நடமாடும் குழுக்கள், 1 பறக்கும்படை அலுவலர், 15 கண்காணிப்பு அலுவலர்கள், 15 முதன்மை கண்காணிப்பாளர்கள், 16 வீடியோ கிராபர்கள் ஆகியோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 13 மையங்களிலும் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை பாதுகாப்புடன் எவ்வித இடையூறுமின்றி தேர்வு நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது”  இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது திருவள்ளுர் வட்டாட்சியர் செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags : applicants ,Tiruvallur district ,examination ,Group 1 ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...