திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருப்பாவை முற்றோதல் நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திருவில்லிபுத்தூர் ஜன.4: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருப்பாவை முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவில்லிபுத்தூரில் திருப்பாவை முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் சன்னதியின் ஜீயர் சடகோப ராமானுஜ ஜீயர், மன்னார்குடி செண்டலங்கார செண்பக ராமானுஜ ஜீயர், கோயமுத்தூர் நாராயண ராமானுஜ ஜீயர் மற்றும் அகில இந்திய குழந்தைகள் நல உரிமை பாதுகாப்பு கமிஷனை சேர்ந்த டாக்டர் ஆனந்த், கலசலிங்கம் பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் வாசுதேவன், ஆண்டாள் கோயில் வேத பிரான் பட்டர் சுதர்சன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் முன்புறம் உள்ள திரு ஆடிபூர கோட்டையில் நடைபெற்ற விழாவை முன்னிட்டு குழந்தைகளின் சொற்பொழிவு மற்றும் பரதநாட்டிய நிகழ்வுகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் திருப்பாவை பாடல்கள் பாடியபடியே ராதே வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். ஏற்பாடுகளை மாநில துறவியர் பேரவை அமைப்பாளர் சரவணகார்த்தி செய்திருந்தார். முன்னதாக நேற்று காலை 108 தட்டுகளில் ஆண்டாளுக்கு சீர் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Related Stories:

>