×

கலைஞர் ஆட்சியை மு.க.ஸ்டாலின் தருவார் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ பேச்சு

ராஜபாளையம், ஜன. 4: ராஜபாளையம் மலையடிப்பட்டி நான்கு முக்கு ரோட்டில் ‘அதிமுகவை புறக்கணிப்போம்’ ‘திமுகவை ஆதரிப்போம்’ என்னும் திமுக மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ தலைமை வகித்தார். ராஜபாளையம் ஒன்றியத்தலைவர் சிங்கராஜ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, நகரச் செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ பேசுகையில், ‘இப்பகுதிக்கு தாமிரபரணித் கூட்டுக் குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், ரயில்வே மேம்பாலம் என அனைத்தும் கொண்டு வந்துள்ளோம். இப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுகையில், ‘கலைஞரின் ஆட்சியை, அவரது மகன் மு.க.ஸ்டாலின் தருவார். நான் எம்ஜிஆர், கலைஞருடன் இருந்துள்ளேன். அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது எங்களுக்கு தெரியும். ராஜீவ், இந்திரா ஆகியோரின் மரணம் ஊருக்கே தெரியும். ஆனால், ஜெயலலிதாவின் இறப்பு ஒரு மர்மமாகவே உள்ளது. இந்த மர்மத்திற்கு விடை காண, நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் நடவடிக்கை எடுப்போம். தற்போது நடக்கும் அதிமுக ஆட்சியில் அனைத்தும் மர்மமாக உள்ளது; எதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை. அதிமுகவை புறக்கணிக்கவும், திமுகவை ஆதரிக்கவும் உங்களை அழைக்கிறோம். இந்த அழைப்பை ஏற்று வருகிறீர்கள். நீங்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். வரும் சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் தற்போது இருக்கும் எம்எல்ஏ தங்கபாண்டியனுக்கு மீண்டும் வாக்களிக்க வேண்டும்’ என்றார்.

Tags : MK Stalin ,Sathur Ramachandran MLA ,
× RELATED கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு...