அருப்புக்கோட்டையில் புதர்மண்டி கிடக்கும் பூங்காக்கள் பயன்பாட்டிற்கு வருமா?

அருப்புக்கோட்டை, ஜன.4: அருப்புக்கோட்டையில் ரயில்வே பீடர்ரோடு, வசந்தம்நகர், அஜிஸ்நகர், திருச்சுழிரோடு, நேதாஜிரோடு ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு பூங்காவும் 20 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. அஜிஸ்நகர், வசந்தம்நகர் பூங்காக்கள் பயன்பாட்டிற்கு வந்தும் முறையான பராமரிப்பு செய்வதில்லை, நேதாஜி ரோடு, திருச்சுழி ரோடு, ரயில்வேபீடர் ரோடு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட பூங்காக்கள் பாதிபணி முடிந்தும் கிடப்பில் உள்ளன. இதனால் முட்புதர்கள் மண்டிக்கிடக்கின்றன. விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்துவிட்டன. இதனால் நகராட்சி நிதி லட்சக்கணக்கில் செலவழிக்கப்பட்டும் மக்களுக்கு பயன்படவில்லை. மக்களின் பொழுதுபோக்கு வசதிக்காக பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால் முறையான பராமரிப்பு இல்லாமலும், ஒரு சில பூங்காக்களில் பணி முடிவடையாமலும் ஆண்டுக்கணக்கில் நடப்பதால் யாருக்கும் பயன்படாமல் உள்ளது. பூங்காக்களை செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>