ஜன.9ல் கோயில் நிர்வாகிகள் தேர்தல்

போடி, ஜன. 4: போடி அருகே தேனி சாலையில் தீர்த்த தொட்டியில் ஸ்ரீ சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில் உள்ளது. இங்கு சித்திர புத்திர நாயனார் திருக்கோயில் சங்கம் உள்ளது. இச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 9ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் கோயில் முன் மண்டபத்தில் சங்க தலைவர் ராமநாதன் தலைமையில் நடைபெற உள்ளது. துணைத்தலைவர் சுருளியாண்டவன், பொருளாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இக்கோயில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் வருகின்ற 2021-23 வரை 3 வருடங்களுக்கு பொறுப்பு ஏற்க அனைத்து உறுப்பினர்களால் வரும் தேர்வு நடைபெற இருக்கிறது. இதில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என சங்க செயலாளர் தேசிங்குராஜன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>