×

பெரியகுளம், தேவதானப்பட்டி பகுதியில் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

தேவதானப்பட்டி, ஜன. 4: பெரியகுளம், தேவதானப்பட்டி பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் சாகுபடி செய்த விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேவதானப்பட்டி பகுதியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்கள் பிரதானமாக உள்ளன. நடப்பாண்டில் பெய்த பருவமழையால் ஜெயமங்கலம், தேவதானப்பட்டி பகுதியில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. குள்ளப்புரம், பொம்மிநாயக்கன்பட்டி, மருகால்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, மேல்மங்கலம், சில்வார்பட்டி ஆகிய பகுதிகளில் வாழை சாகுபடி செய்துள்ளனர். கத்தரி, வெண்டை, தக்காளி,  முருங்கை பீன்ஸ், மக்காச்சோளம், சாம்பார் பூசணி சாகுபடியும் நடந்து வருகிறது. நெல் நேரடி விதைப்பு 35 நாட்கள் முதல் 45 நாட்களை கடந்துள்ளது.  இதேபோல, வாழை அதிகமாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது தொடர்ந்து இரண்டு நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் நெல், வாழை, காய்கறி சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெரியகுளம் பகுதியில் மழை
இதேபோல, பெரியகுளம் அதன் சுற்று வட்டார பகுதிகளான கும்பக்கரை, சோத்துப்பாறை, முருகமலை, வடுகபட்டி, லட்சுமிபுரம், தேவதானப்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று மதியம் முதல் 2 மணி நேரத்துக்கும் மேலாக சாரல்  மழை பெய்தது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Periyakulam ,Devadanapatti ,
× RELATED வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அவதி