திமுக மக்கள் சபை கூட்டம்

காரைக்குடி, ஜன.4:  காரைக்குடி அருகே விசாலயன்கோட்டையில் கல்லல் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் 6ம் நாள் நிகழ்ச்சியாக அதிமுகவை நிராகரிப்போம் மக்கள் கிராமசபை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் அசோகன் முன்னிலை வகித்தார். மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் புலிக்குத்தி சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி ஜேசுராஜ், முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீரவி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பரணிகிட்டு, ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணம், தொண்டரணி துணை அமைப்பாளர் அடைக்கலராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதிமுகவை நிராகரிப்போம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. அதிமுக அரசின் அவலங்கள் குறித்து குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.

Related Stories:

>