திமுக மக்கள் சபைக்கூட்டம்

தேவகோட்டை, ஜன.4: தேவகோட்டை 14வது வார்டு தி.மு.க சார்பில் மக்கள் சபைக் கூட்டம் நடந்தது. நகரச் செயலாளர் பெரி.பாலமுருகன் தலைமை வகித்தார். முன்னாள் கவுன்சிலர்கள் இளங்கோ, கருணாநிதி, ஜாகிர்உசேன் முன்னிலை வகித்தனர். 14வது வார்டு செயலாளர் அன்புச்செல்வம் வரவேற்றார். மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் அழகையா, நகர மகளிரணி செயலாளர் ராசாத்தி மற்றும் திரளான மகளிர் கூட்டத்தில் பங்கேற்றனர். நகரச் செயலாளர்

பாலமுருகன் கூறுகையில், அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்ற முடிவினை மக்கள் முன் எடுத்து வருகின்றார்கள். அ.தி.மு.க அரசில் மக்களின் அடிப்படை வசதிகள், வாழ்வாதார பிரச்னைகள் எதுவும் தீர்க்கப்பட வில்லை. அரசு அலுவலகங்களுக்கு மக்கள் அலைகின்றனரே தவிர அவர்களின் கோரிக்கையை அரசுத்துறையினர் உதாசீனப்படுத்துகின்றனர். தி.மு.க ஆட்சியில் மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படும் என்று கூறினார்.

Related Stories:

>