கட்டபொம்மன் பிறந்த நாள் விழா

கமுதி, ஜன.4:  கமுதி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று சுதந்திர போராட்ட வீரர்  வீரபாண்டிய கட்டபொம்மன் 262-வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கீழராமநதி கிராம பொதுமக்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். கொடியேற்று விழா நடைபெற்றது. பின்னர் சிலம்பாட்ட அரங்கேற்ற விழாவும் நடைபெற்றது. இதில் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா முடிந்ததும் இளைஞர்கள் ஏராளமானோர் மதுரைக்கு சென்று பெரியார் நிலையம் அருகே உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதேபோல் பெரிய உடப்பங்குளம், உடைகுளம், இடையங்குளம், நாராயணபுரம், தளவநாயக்கன்பட்டி, கிழாமரம் புளிச்சிகுளம் உட்பட ஏராளமான கிராமங்களில் இவ்விழா கொண்டாடினர்.

Related Stories:

>