பசும்பொன்னுக்கு கருணாஸ் தெய்வீக யாத்திரை துவக்கம்

கமுதி, ஜன.4:  கமுதி அடுத்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் திருவாடானை  தொகுதி எம்எல்ஏ கருணாஸ் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் கூறும்போது, ‘‘இன்னும் ஓரிரு வாரங்களில் சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலையில் இருந்து பசும்பொன்னை நோக்கி தெய்வீக யாத்திரை துவங்க உள்ளேன். முதலமைச்சரின் ஒப்புதலை பெற்று மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்ட வேண்டும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இரண்டு சீட்டுக்களை முதலமைச்சரிடம் கேட்க உள்ளேன் தெரிவித்தார்.

Related Stories: