×

அமைதியை நோக்கி வாழ்வியல் கண்காட்சி

ஆர்.எஸ்.மங்கலம், ஜன.4: ஆர்.எஸ்.மங்கலத்தில் சமூக நீதி பேரவை மற்றும் ஜமாத்தார்கள், இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து அமைதியை நோக்கி வாழ்வியல் கண்காட்சியை நடத்தியது. இதனை எம்பி நவாஸ்கனி துவக்கி வைத்தார். ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் இளையான்குடி ஆகிய ஊர்களை சேர்ந்த ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர். சார் ஆட்சியர் சுகபுத்ரா, திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், மாநில விவசாய அணியின் துணை செயலாளர் நல்லசேதுபதி, சேர்மன் ராதிகா பிரபு, தாசில்தார் ரவிசந்திரன், அமமுக மாவட்ட செயலாளர் ஆனந்த், பாதிரியார்கள் சாமு இதயன் வின்சென்ட், அமல்ராஜ் தமுமுக மாநில பொதுச்செயலாளர் ஹாஜாகனி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மத நல்லிணக்கத்தை பேணும் வண்ணம் பல்வேறு வகையான கருத்துக்கள் அடங்கிய தொகுப்புகள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி தொடர்ச்சியாக மூன்று நாட்கள் தனியார் மஹாலில் நடைபெற்று வருகிறது. இதில் அரசியல் கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள், சமுதாய தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர. இங்கு வந்து செல்லும் அனைத்து பொதுமக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Tags : Biology Exhibition towards Peace ,
× RELATED பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு