×

அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டில் மல்லுக்கட்ட தயாராகும் காளைகள்

அலங்காநல்லூர், ஜன. 4: மதுரை மாவட்டம் பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜன. 15.16 ஆம் தேதிகளில்ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதனை காண்பதற்காக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் பார்வையாளர்கள் வருவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஏழு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில் 3 மாதத்துக்கு முன்பு தளர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு நிகழ்வுகளுக்காக தமிழக அரசு தளர்வு அறிவித்தது. கோயில் கும்பாபிஷேகம், திருவிழாக்கள் உள்ளிட்ட திருமண நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நடத்துவதற்கு அனுமதி வழங்கி வந்தது.

இந்த நிலையில் வரும் ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுமா, நடைபெறாதா என்று பல்வேறு குழப்பமான சூழ்நிலை இருந்த வந்த நிலையில் 50 சதவீத பார்வையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களைப் பயன்படுத்தி ஜல்லிக்கட்டு போட்டிகள் உரிய கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அலங்காநல்லூர் பாலமேடு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகளை உரிய பாதுகாப்புடன் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இப்போட்டிகளில் உள்ளூர் காளைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அய்யூர் கிராம நாட்டாமை கதிரேசன் மற்றும் தயாளன், நடராஜன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.பாலமேட்டை சேர்ந்த கண்ணன் கூறுகையில், ஜல்லிக்கட்டு நிகழ்வில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட முக்கிய விஐபிகள் தலையீடு காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் உள்ளுர் காளைகள்அதிக அளவில் பங்கேற்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் அனுமதி சீட்டை வைத்து எந்த காளைகளையும் ஜல்லிக்கட்டு நிகழ்வில் பங்கு கொள்ள செய்ய முடியவில்லை.

உள்ளூர் பிரமுகர்கள் என்ற பேரில் வரிசையில் செல்லாமல் பலரும் பல்வேறு குறுக்கு வழிகளில் சொல்லக்கூடிய அவல நிலை உள்ளது. எனவே, இந்த ஆண்டு அதிக அளவில் உள்ளூர் காளைகளை பங்குபெற செய்ப தேவையான நடவடிக்கையை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகம் எடுக்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிலையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய பகுதிகளில் காளை வளர்ப்போர் தங்கள் காளைகளுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர். இதனால் பொங்கல் பண்டிகையை எதிர்நோக்கி காளைகளும் தயாராகி வருகின்றன.

Tags : areas ,Jallikkat ,Palamedu ,
× RELATED மதுரை மாவட்டம் பாலமேடு அருகே...