×

மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும் மூர்த்தி எம்எல்ஏ பேச்சு

வாடிப்பட்டி,ஜன. 4: மதுரை வடக்கு மாவட்டம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு சிறப்பு செயல்வீரர்கள் கூட்டம் சிக்கந்தர்சாவடியில் நடந்தது. ஒன்றிய செயலாளர் பொதும்பு தனசேகர் தலைமை வகித்தார். மேற்கு (வடக்கு) ஒன்றிய செயலாளர் சிறைச்செல்வன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் வெங்கடேசன், பாலசுப்பிரமணியம், சோமசுந்தர பாண்டியன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் ஜி.பி.ராஜா, மருதுபாண்டியன், வக்கில் கலாநிதி, முத்தையன், ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

வடக்கு மாவட்ட செயலாளரும், கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மூர்த்தி பேசுகையில், அவர் தமிழகத்தில் நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்களை விட ஆட்சியாளருக்கு அதிக கமிஷன் கிடைக்கும் திட்டமே அதிகளவில் நடைபெறுகிறது. இதனால் பெண்கள் இந்த ஆட்சி மீது கடுமையான கோபத்தில் உள்ளனர். சோழவந்தான் தொகுதி வெற்றியை உறுதி செய்வதில் மதுரை மேற்கு ஒன்றியம் முக்கிய பங்கு வகிக்கும். மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை திமுக 10சட்டமன்ற தொகுதிகளையும் கைப்பற்றி தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பார் என்று கூறினார். கூட்டத்தின் போது மாவட்டச்செயலாளர் மூர்த்தி எம்எல்ஏவிற்கு வெள்ளி வீரவாள் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.

மதுரை அருகே பூலாம்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட வலச்சிகுளம் கிராமத்தில் மாநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கிராம சபை கூட்டம் கொட்டும் மழையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் வடக்கு மாவட்டச்செயலாளர் பி.மூர்த்தி கலந்து கொண்டார். வலச்சிகுளம் ஊராட்சி மன்றத்தலைவர் சண்முகம், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் தெய்வா, செயலாளர் ரமேஷ் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பூலாம்பட்டி கிராமத்தில் மக்கள் கிராமசபை கூட்டம் நடந்தது.

Tags : Murthy MLA ,constituencies ,DMK ,Madurai district ,
× RELATED தமிழகம், புதுச்சேரி 40 தொகுதிகளிலும்...