×

நாங்குநேரி அருகே வெள்ளம் அடித்துச்சென்ற நம்பியாற்று பாலத்தால் 10 கிராமங்கள் துண்டிப்பு

நாங்குநேரியில்: நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே இறைப்புவாரி ஊராட்சி உள்ளது. இங்கு  காரியாகுளம் பகுதியில் இருந்து தெற்கு காரியாகுளம் செல்லும் வழியில் நம்பியாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம், கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அடித்துச் செல்லப்பட்டது இதனால் சுப்பிரமணியபுரம் வடக்கு,  தெற்கு, காரியா குளம், தாமரைகுளம், பாண்டிச்சேரி சீயோன் மலை, கல்மாணிக்கபுரம், சித்தூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் போக்குவரத்து வசதியின்றி துண்டிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பாலத்தின் இரு கரையிலும் ஏற்பட்ட அரிப்பால் ராட்சத பள்ளம் உருவானதன் காரணமாக அப்பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் செல்ல முடியாததால் விவசாய பணிகள் முற்றிலும் தடைபட்டுள்ளன. இதனால் அவதிப்படும் கிராம மக்கள், உடனடியாக தற்காலிக பாலமும், நிரந்தரத் தீர்வாக வலுமிக்க புதிய பாலமும் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் …

Tags : Nambiath bridge ,Nanguneri ,Nellai district ,Panchayat of Thuppuvari ,Nambi River ,Kariyakulam ,South Kariyakulam ,Subramaniapuram North ,South ,Kariya Kulam ,Thamaraikulam ,Pondicherry Sion Hill ,Kalmanikapuram ,Chittoor ,
× RELATED பாஜ நிர்வாகி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்