×

கோவை கல்லூரி மாணவி கூட்டு வல்லுறவு கொடூரம் பெண்களுக்கான பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவையில் மாணவியைக் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். அந்தக் கொடிய குற்றவாளிகளைக் தப்பித்து ஓட முயற்சித்த போது, அவர்களைக் காலில் சுட்டுக் கைது செய்துள்ளனர்.தமிழ்நாட்டில் தொடர்ந்து பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. 2024 ஆம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை, பாலியல் வன்கொடுமை முயற்சிகள் உட்பட, 406 லிருந்து 471 ஆக அதிகரித்துள்ளது. 2023ம் ஆண்டில் 46 ஆக இருந்த பாலியல் துன்புறுத்தல் வழக்குகளின் எண்ணிக்கை 2024ம் ஆண்டில் 96 ஆக உயர்ந்துள்ளது. எனவே, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தமிழ்நாடு அரசு கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மேலும் இந்தக் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மூவரும் குடிபோதையில் இருந்துள்ளனர். எனவே, இனியும் தாமதிக்காமல் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Govai College ,Thirumaalavan ,Chennai ,Vice President ,Thirumavalavan ,Goa ,Tamil Nadu ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி