×

குடிநீர் குழாயில் கசிவு ஓடையில் ஓடும் காவிரி சரி செய்யப்படுமா?

குஜிலியம்பாறை, ஜன.4: குஜிலியம்பாறையில் காவிரி குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு, வறட்டாற்று ஓடையில் வீணாக செல்கிறது. நீர் கசிவை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் காவிரி ஆற்று பகுதியில் கடந்த 2005ம் ஆண்டு ராட்சத கிணறு அமைக்கப்பட்டது. அதிலிருந்து ராட்சத குழாய்கள் மூலம் கரூர், ஜெகதாபி, பாளையம், குஜிலியம்பாறை, கோவிலூர், எரியோடு ஆகிய பகுதிகளின் வழியாக திண்டுக்கல் நகருக்கும்,  வேடசந்தூர் வழியாக ஒட்டன்சத்திரம் நகருக்கும் காவிரி கூட்டு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில் குஜிலியம்பாறை மெயின் ரோட்டில் பாளையம் பேரூராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள பாலத்தின் அடியில் அமைக்கப்பட்ட காவிரி குடிநீர் குழாயில் கடந்த சில தினங்களுக்கு முன்பு லேசான நீர்கசிவு ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் நீர்கசிவு அதிகமாகி பாலத்தின் அடியில் உள்ள வறட்டாற்று ஓடையில் வீணாக செல்கிறது. குஜிலியம்பாறை ஒன்றிய பகுதியில் தற்போது குடிநீர் தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே குஜிலியம்பாறை வறட்டாற்று ஓடையில் காவிரி குடிநீர் குழாயில் ஏற்பட்ட நீர்கசிவை சரிசெய்ய வேண்டும். குடிநீர் வீணாக செல்வதை தடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Cauvery ,leak stream ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி