×

தேமுதிக ஆலோசனை கூட்டம்

ஒட்டன்சத்திரம், ஜன.4: ஒட்டன்சத்திரத்தில் தேமுதிக சார்பில் சட்டமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் பாலு தலைமை வகித்தார். கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொகுதி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைத்து, சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் சிவக்குமார், சங்கர், பிரபாகரன், வள்ளிநடராஜன், ஒன்றிய செயலாளர்கள் சண்முகவேல், நல்லசாமி உள்ளிட்ட வேடசந்தூர், குஜிலியம்பாறை, வடமதுரை, கொடைக்கானல், பழநி பகுதிகளைச் சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் நகர செயலாளர் சிக்கந்தர் நன்றி கூறினார்.

Tags : Temujin Consultative Meeting ,
× RELATED தேமுதிக ஆலோசனை கூட்டம்