துணைவேந்தர் பதவியேற்பு

சின்னாளபட்டி, ஜன.4: காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் முனைவர் சிவக்குமார் கூறியதாவது: காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய பேராசிரியர் முனைவர் சுப்புராஜ் பணி நிறைவு பெற்றார். எனவே மத்திய கல்வி அமைச்சகத்தின் உத்தரவின்படி காந்திகிராம கிராமிய நிகர்நிலை  பல்கலைக்கழகத்தின் வேந்தர் அண்ணாமலை பல்கலைக்கழக மூத்த பேராசிரியர் முனைவர் குபேந்திரனை பொறுப்பு துணைவேந்தராக நியமித்துள்ளார் என்றார். பல்கலை துணைவேந்தராக (பொறுப்பு) பதவியேற்ற பேராசிரியர் குபேந்திரனுக்கு பல்கலை பேராசிரியர்கள், பல்கலை அலுவலக பணியாளர்கள், நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories:

>