சித்த மருத்துவ முகாம்

வத்தலகுண்டு, ஜன.4: வத்தலகுண்டுவில் உலக சித்தர்கள் தினத்தை முன்னிட்டு இலவச சித்த வைத்திய முகாம் நடைபெற்றது. பசுமை வதிலை இயக்க தலைவர் மருதராஜன் தலைமை வகித்தார். வத்தலகுண்டு அரசு மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர் வசந்த் மில்டன் ராஜ் வரவேற்றார். வத்தலகுண்டு சமூக ஆர்வலர் டாக்குமெண்ட் கோபால், ஆசிரியர் பண்ணை கோமகன் வாழ்த்தி பேசினர். பசுமை வதிலை இயக்க நிர்வாகிகள் தங்கராஜ் ராஜா, ராமமூர்த்தி, ராஜாமுகமது, பாலு, வனராஜா, ரவி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. 

Related Stories:

>