×

தாமதமாக வந்தவர்கள் திருப்பி அனுப்பி வைப்பு தொழிற்பள்ளிகள் தொடங்குதல் தொடர் அங்கீகாரம் பெற அழைப்பு

திருச்சி, ஜன.4: நடப்பு கல்வியாண்டிற்கு 1.7.2021 முதல் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல் தொடர் அங்கீகாரம் பெறுதல், தொழிற் பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள்/ தொழிற்பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. 2021-2022ம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதளம் விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்க உள்ள அனைத்து தொழிற்பிரிவுகள்/கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரு விண்ணப்பத்தில் மட்டுமே அளிக்க வேண்டும்.

என்இஎப்டி மூலம் தொழிற்பள்ளி பணம் (விண்ணப்பக்கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம்) செலுத்தும்போது தொழிற்பள்ளியின் வங்கி கணக்கிலிருந்து டிரான்ஸ்பர் செய்யப்பட வேண்டும். விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வுகட்டணம் எந்த தொழிற் பள்ளிக்காக செலுத்தப்பட்டுள்ளது என்பதை பேங்க் ஸ்டேட்மென்டரி கண்டறிய ஏதுவாக, தாளாளர் பெயரில் உள்ள வங்கி கணக்கிலிருந்து ஆர்டிஜிஎஸ்/என்இஎப்டி மூலம் தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தொழிற் பிரிவிற்கும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும் விண்ணப்ப கட்டணம், ஆய்வு கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் ஆகியவை இணையதளத்தில் உள்ள புராஸ்பெக்டாசில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வரும் 30.4.2021 கடைசி நாள் ஆகும். இதற்குபின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in < http://www.skilltraining.tn.gov.in/ > என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம். திருச்சி மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டும் விவரம் பெறலாம்.

Tags : Late Arrival Deposit Vocational Schools Startup Series ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு