×

கரும்பு அறுவடை செய்யும் பணி திருச்சி மத்திய சிறையில் சமையலர் காலிப்பணியிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சி, ஜன.4: திருச்சி மத்திய சிறையில் காலியாக உள்ள ஒரு சமையலர் பணியிடத்திற்கு 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சமையல் பணியில் 2 வருடம் அனுபவம் பெற்று 1.7.2019 அன்று 18 வயதுக்கு மேற்பட்டு 30 வயதுக்குட்பட்டவர் இன சுழற்சி பிரிவில் தெரிவு செய்து நியமனம் செய்யப்பட உள்ளது. சமையல் பதவி ஊதிய விகிதம் ரூ.15,900-50,400ல் குறைந்தபட்ச தொகை ரூ.15,900 மற்றும் இதர தகுதி உள்ள படிகளும் ஆகும். பதவிக்குரிய தகுதி பெற்றவர்கள் சுய விபரங்களை  வரும் 20ம் தேதிக்குள் திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு கிடைக்கப் பெறும் வகையில் அனுப்பிட வேண்டும்.

Tags : Chef ,Trichy Central Jail ,
× RELATED திருச்சி மத்திய சிறை நுழைவாயிலில் ரூ1.09...