கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது

துறையூர், ஜன.4: துறையூர் புது செட்டித்தெருவை சேர்ந்தவர் சரத்குமார்(29). இவர் தனது உறவினரை பார்க்க ஜமீன்தார் பள்ளி செல்லும் வழியில் சென்று கொண்டிருந்தார். அப்போது சுடுகாடு அருகே வாலிபர் ஒருவர் திடீரென சரத்குமாரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.300ஐ பறித்துக்கொண்டார். இது குறித்து அவர் துறையூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சம்பவ இடம் சென்ற போலீசார் அங்கிருந்த வாலிபரை பிடித்தனர். அவரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் கத்தியைக் காட்டி மிரட்டிய வாலிபர் துறையூர், விநாயகர் தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் இளவரசன்(21) என்று தெரியவந்தது. இதையடுத்து துறையூர் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.

Related Stories:

>