கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருவெறும்பூர், ஜன.4: திருவெறும்பூர் அருகே கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் குப்பை கொட்டுவதற்கு இடம் மற்றும் நிதி ஒதுக்காத தமிழக அரசையும், உள்ளாட்சி துறையையும், பஞ்சாயத்து யூனியன் நிர்வாகத்தையும் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ., மற்றும் இந்திய கம்யூ., இணைந்து பெல்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ., ஒன்றிய நிர்வாகி ரவி தலைமை வகித்தார். கிளை செயலாளர்கள் பீர்முகமது, சாலமன், பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூ., செயலாளர் நடராஜன், இந்திய கம்யூ., ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர் இளையராணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட பெல்பூர் அருகில் உள்ள உய்யக்கொண்டான் ஆற்றின் கரையில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றி பொது மக்களுக்கு நோய் வராமல் பாதுகாக்க வேண்டும். கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் குப்பை கொட்ட உடனே இடம் ஒதுக்கி குப்பை கிடங்கு அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். கூத்தைப் பார் பேரூராட்சி மற்றும் கிருஷ்ணசமுத்திரம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க வேண்டும். கொசு மருந்து அடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Related Stories:

>