×

திருவாரூர் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வில் 50 சதவீதம் பேர் ஆப்சென்ட்

திருவாரூர், ஜன.4: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற குரூப்-1 தேர்வினை விண்ணப்பித்தவர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே எழுதினர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் சப்-கலெக்டர், டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் மற்றும் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் என மொத்தம் 66 காலிப் பணியிடங்களுக்காக குரூப்-1 தேர்வானது நேற்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இதனையொட்டி மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 529 பேர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில் இவர்களுக்காக திருவாரூர் வ.சோ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜிஆர்எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நியூ பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 4 மையங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெற்றது. இதனையொட்டி வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் நியூபாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வினை கலெக்டர் சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காலை 10 மணியளவில் தேர்வு துவங்கிய நிலையில் தேர்வர்கள் காலை 9:15 மணிக்குள் தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும், விடைத்தாளில் உரிய இடங்களில் கையெழுத்திட்டு இடது கை பெருவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் மற்றும் தெரியாத வினாக்களுக்கு 5வது காலத்தில் அதனை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

மேலும் தற்போது கொரோனா காலம் என்பதால் அனைத்து மையங்களிலும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு இந்த தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் ஒவ்வொரு தேர்வு மையத்திலும் ஒரு அரசு மருத்துவரை கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே தேர்வர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் விண்ணப்பித்திருந்த 2 ஆயிரத்து 529 பேர்களில் ஆயிரத்து 285 பேர்கள் மட்டுமே நேற்று இந்த தேர்வை எழுதினர். பல்வேறு காரணங்களினால் ஆயிரத்து 244 பேர்கள் (50 சதவீதம் பேர்) தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : district ,Thiruvarur ,examination ,Group-1 ,
× RELATED கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள்