மின்சாதன பொருட்களும் பறிபோனது திருச்சி, மதுரை, கோவை தலைநகராக உருவாகும்

திருவாரூர், ஜன.4: திருவாரூர் மாவட்டத்தில் விவசாய கல்லூரி அமைக்கப்படும் என சிவசேனா கட்சி தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவசேனா கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி திருவாரூரில் கட்சியின் மாவட்ட தலைவர் நீலமேகம் தலைமையில் நடைபெற்றது. இதில் திருச்சி கோட்ட பொறுப்பாளர் சுந்தரவடிவேலு கலந்து கொண்டு கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் திருவாரூர் மாவட்டம் உட்பட மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வேளாண் கல்லூரி அமைக்கப்படும், அனைத்து மாவட்டங்களிலும் தலா 2 இடங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், வங்கிக் கடனும் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், தமிழறிஞர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படும். திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்கள் தமிழகத்தின் தலை நகரங்களாக உருவாக்கப்படும் போன்றவை குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் மாநில செயலாளர் சரவணன், மண்டலத் தலைவர் வின்சென்ட், இளைஞரணி மாநில செயலாளர் சிங்கார வடிவேலன் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>