கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் அகத்திய முனிவருக்கு குருபூஜை

கும்பகோணம், ஜன.4: கும்பகோணத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோயில் மேற்கு பிரகாரத்தில் கும்பமுனி எனப்படும் அகத்திய முனிவருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இந்த சன்னதியில் உள்ள அகத்திய முனிவருக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தன்று குருபூஜை விழா நடைபெறும். நேற்றுமுன்தினம் ஆயில்யம் நட்சத்திரத்தை முன்னிட்டு குருபூஜை விழா நடைபெற்றது. இதனையொட்டி 1ம்தேதி ஆறுகால விநாயகர், ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை, முருகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்றுமுன்தினம் காலை காவிரி திருமஞ்சன படித்துறையிலிருந்து கஜவாகனத்தில் புனிதநீர் எடுத்து கும்பமுனி சித்தருக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் பங்கேற்ற பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். அன்னதானம் நடைபெற்றது. மாலை கும்பமுனிவர் வீதியுலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா, கோயில் செயல் அலுவலர் அசோக்குமார் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Related Stories:

>