கறம்பக்குடி ராங்கியன் விடுதியில் பழுடைந்த அரசு தொடக்கபள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்

கறம்பக்குடி, ஜன.4: கறம்பக்குடி ராங்கியன்விடுதி பகுதியில் பழுதடைந்த தொடக்கப்பள்ளி கட்டிடத்திற்கு பதிலாக புதிய பள்ளிக்கூடம் கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராங்கியன்விடுதி ஊராட்சி அமைந்துள்ளது. இவ்வூராட்சியில் சுமார் மூவாயிரத்துக்கு ஏற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பல்வேறு கிராமங்கள் உள்ளன. அப்பகுதி பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் நலன்கருதி கல்வியை ஊக்குவிக்கும் வகையில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்க பள்ளியை தொடங்கியது. 1ம் வகுப்பில் இருந்து 5ம் வகுப்பு வரை மாணவர்கள் அந்த பள்ளியில் கல்வி பயின்று வந்தனர்.

ஒரே ஒரு பள்ளி கட்டிடத்துடன் செயல்பட்டு வந்த பள்ளி கட்டிடத்திற்கு மேலும் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்றும், மேலும் குறிப்பாக அரசு தொடக்க பள்ளியை நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தி தர வேண்டும் என்று கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். அதன் பிறகு அரசு தொடக்க பள்ளியை நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தி அறிவித்தது. தொடக்க பள்ளியாக பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பள்ளி கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. அதன் எதிரே புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு அப்பள்ளி கட்டிடத்தில் நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.

முதலில் தொடக்க பள்ளியாக செயல்பட்டு வந்த பள்ளி கட்டிடம் தற்போது 5 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே பழுதடைந்தும் பள்ளி கட்டிடத்தின் ஓடுகள் பெயர்ந்து கீழே விழுந்தும் எந்த நேரத்திலும் இடிந்து கீழே விழுந்து ஆபத்தை ஏற்படுத்த கூடும் என்ற அச்சத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளனர். எனவே புதிய வகுப்பறை கட்டிடங்கள் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி கட்டி தர வேண்டும் என ராங்கியன் விடுதி கிராம பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>