×

அதிமுகவில் உள்ளவர்களுடன் பேசி வருகிறேன்: செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

 

கோவை: அதிமுகவில் உள்ளவர்களுடன் பேசி வருகிறேன்: செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கடந்த 30ம் தேதி முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள மதுரை சென்ற செங்கோட்டையன், அங்கு ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை சந்தித்து பேசினார். இதனால், கட்சி கட்டுப்பாடுகளை மீறியதாக கூறி செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கினார். இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது; ஆண்டுகளாக கட்சியில் உள்ள என்னை தனிப்பட்ட முறையில் யாரும் இயக்க முடியாது என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். என்னுடைய அடுத்தக் கட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள்; நல்லதே நடக்கும். அதிமுகவில் உள்ளவர்களுடன் பேசி வருகிறேன்; அதுகுறித்து வெளியில் தெரிவித்தால் அவர்களுக்கு ஆபத்து. அதிமுகவில் இருந்து யார் யார் என்னுடன் பேசுகின்றனர் என்பது எனக்கும் அவர்களுக்கும் மட்டும்தான் தெரியும். எடப்பாடி பழனிசாமியின் மகன், மைத்துனர், மருமகன் உள்ளிட்டோரின் குடும்ப ஆதிக்கம் அனைத்திலும் உள்ளது. மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்திருப்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம் என்றும் கூறினார்.

 

Tags : Sengkottaian ,Govai ,Atamugu ,Senkottaian ,Madura ,Muthuramalinghe Devar Jayanti Festival ,O. ,Paneer Selvam ,DTV Dinakaran ,Sasikala ,
× RELATED தொழில் முதலீட்டாளர் மாநாடு மூலம்...