×

பெரம்பலூர் மாவட்டத்தில்

பெரம்பலூர், ஜன.4: பெரம்பலூர் மாவட்டத்தில் 9 மையங்களில் நடந்த குரூப்-1 தே ர்வில் 50 சதவீதம் பேர் மட்டும் நேற்று தேர்வெழுதினர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-1 தேர் வு நேற்று மாநிலமெங்கும் நடத்தப்பட்டது. டெபுட்டி கலெக்டர், டிஎஸ்பி, கமர்ஷி யல் டேக்ஸ் ஆபீசர், வட்டார போக்குவரத்து அலுவலர், கூட்டுறவு துணைப்பதிவாளர், மாவட்ட பதிவாளர், ஊராட்சிகள் உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலர், தொழி லாளர் உதவி ஆணையர், மாவட்ட சமூகநல அலுவலர், 2ம் நிலை நகராட்சி ஆ ணையர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவ லர் உள்ளிட்ட அரசுத்துறை முக்கிய பதிவியிடங்களை வகிக்கக்கூடிய நபர்களை தேர்வு செய்வதற்கான இந்தத் தேர்வினை நேற்று பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தனலெட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகம் என மொத்தம் 4 இடங்களில் அமைக்கப்பட்ட 9 மையங்களில் மொத்தம் 2,489பேர் எழுத ஹால் டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் நேற்று குரூப்-1 தேர்வில் 1,271 பேர்கள் மட்டுமே கலந்து கொண்டு எழுதினர். 1,218 பேர் தேர்வுக்கு வரவில்லை. 48.94 சதவீதம் பேர்கள் தேர் வுக்கு வராதது டிஎன்பிஎஸ்சி தேர்வுத் துறையினருக்கு அதிர்ச்சியையே ஏற்படுத் தியது. ஒவ்வொரு அறையிலும் பாதிபேர் வராததால் மேஜைகள் காலியாகக் கிட ந்தன. தேர்வு மையங்களை பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டார். பறக்கும் படை அதிகாரியாக தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சக்திவேல் தேர்வு மையங் களைப் பார்வையிட்டு ஆய் வுசெய்தார். தேர்வுஎழுத வந்த அனைவரும் வாயில் பகுதியிலேயே தெர்மல் ஸ் கேனர் கருவி மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்து, முகக்கவசங்களுடன் மட் டுமே அறைகளுக்குள் அனு மதிக்கப்பட்டனர்.

Tags : district ,Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி