நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் எதிர்ப்பு பெரம்பலூரில் ஒற்றையர் டேபிள் ெடன்னிஸ் போட்டி

பெரம்பலூர்,ஜன.4:பெரம்பலூர் மாவட்ட மேஜை பந்து க்கழகம் சார்பாக மாவட்ட அளவிலான ஒற்றையருக்கான டேபிள் டென்னிஸ் போட்டி, ஆத்தூர் சாலையி ல் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் 11,14,17,19,21 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியருக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியின் நடுவராக பாஸ்கர் முன்னின்று நடத்தினார். பெரம்பலூர் மாவ ட்ட மேஜைப் பந்துக் கழக செயலாளர் ராமர் முன்னிலை வகித்தார். போட்டிகளை பெரம்பலூர் மாவட்ட மேஜைப்பந்துக் கழக தலைவர் சரவணன் துவக்கி வைத்தார். இதில் பெரம்பலூர் மாவட்ட அளவிலான 10க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். போட்டியில் ஒற்றையர் பிரிவில் முதலி டம் பெறும் மாணவ, மாணவியர் மதுரையில் ஜனவரி 24,25ம் தேதிகளில் நடைபெறும் மாநிலஅளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகளுக்கு, பெரம்பலூர் மாவட்ட அணி சார்பாக பங்கேற்கத் தகுதி பெறுவர்.

Related Stories:

>