30 மாணவர்கள் பங்கேற்பு பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையத்திலும் சிறப்பு மனு விசாரணை முகாம்

பெரம்பலூர், ஜன.4: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய ங்களிலும் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவ ட்டத்தில் உள்ள பெரம்பலூர், பாடாலூர், குன்னம், மங்கலமேடு, அரும்பாவூர், வி. களத்தூர், கை.களத்தூர், மருவத்தூர் என அனைத்து காவல் நிலையங்களிலும் அந்தந்த எல்லைக்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு உள்ள குறைகளை தீர்க்க சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. இதில் பொது மக்கள் பலர் கலந்துகொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொண்டனர். இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்களிடமிருந்து மொத்தம் 61 மனுக்கள் பெறப்பட்டு அவற்றி ல் 44 மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீதமுள்ள 17 மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories:

>