அரியலூர் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வில் 1051 பேர் ஆப்சென்ட்

அரியலூர், ஜன.4: அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-1 தேர்வு நடைபெற்ற மையங்களை கலெக்டர் ரத்னா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-1 தேர்வு நடந்த தத்தனூர் மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரி, அரியலூர் அரசு மேல்நிலைபள்ளி ஆகிய இடங்களில் ஆய்வு செய்த கலெக்டர் மாவட்ட கலெக்டர் ரத்னா பின்னர் தெரிவித்ததாவது: அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, நிர்மலா பெண்கள் மேல்நிலைபள்ளி, மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரசு நகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 மைங்கள், தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 மைங்கள், தத்தனூர் மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரி என மொத்தம் 9 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது.

அரியலூர் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வு எழுத மொத்தம் 2399 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 1348 பேர் மட்டுமே நேற்று தேர்வு எழுதினர். 1051 பேர் தேர்வு எழுதவரவில்லை. மாவட்டத்தில் 9 ஆய்வுப்பணி அலுவலர்களும், 9 மருத்துவக்குழுக்ளும், 2 நடமாடும் குழுக்கள், 1 பறக்கும் படை, அரசுப் பணியாளர் தேர்வாணைய பணியாளர்களும் தேர்வு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். மேலும், கொரோனா பேரிடர் காலத்தில் தேர்வு மையங்கள் அனைத்தும் கிருமி நாசினி கொண்டு தூய்மை செய்யப்பட்டு, தேர்வர்கள் அனைவரும் தெர்மல் கருவி மூலம் அவர்களின் உடல் வெப்பநிலை கண்காணிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், தேர்வர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என கலெக்டர் சாந்தா தெரிவித்தார். ஆய்வின்போது, ஆர்டிஓ பூங்கோதை மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories:

>